திசையன்விளை அருகே உள்ள உவரி கடலோர காவல்நிலைய உதவி காவல் ஆய்வாளர் கோபி தலைமையில் தலைமை காவலர்கள் ரெஸ்ட் குமார், நந்தகோபால், முதல்நிலைக்காவலர்கள் முருகன், பிரிட்டோ,செல்வகணேஷ் ஆகியோர் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் கூடுதாழை அருகே விலக்கு அருகே வாகன சோதனையில். ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியை மடக்கி சோதனை செய்தனர்.அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 120 பைகளில் சுமார் 6 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. உடனே குமரி மாவட்டம் பரக்குன்று ஊரைச் சேர்ந்த டரைவர் அஜு(41),படந்தாலுமூடுவைச் சேர்ந்த கிளீனர் ரவீந்திரன்(47), ஆகியோரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
மேல் நடவடிக்கை க்காக மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.









