X
காவல் கிணறு பூ மார்க்கெட் பகுதியில்
வசித்து வருபவர் ராமசாமி (65).
இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு
மகள் உள்ளனர்.இருவருக்கும். திருமணமாகி விட்டதால் மனைவியுடன் தனியாக ஆடு மேய்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை பூ மார்க்கெட் பகுதியில் முதியவர் தலையின் பின் புறம் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை அங்கு தற்செயலாக சென்றவர்கள் பார்த்த நிலையில் உடனடியாக பணகுடி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்த தாக கூறப்படுகிறது.
விரைந்துசென்ற வள்ளியூ ர்
ஏ.எஸ்.பி.சமய சிங் மீனா தலைமையில் பணகுடி இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி மற்றும் போலீசார் முதியவர் கொலை செய்யப்பட்ட இடம் மற்றும் கொலைக்கான தடயங்கள் சம்பந்தமாக விசாரணை செய்தனர்.
மேலும் நெல்லையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் கொலையாளிகளின்
தடயங்கள் கண்டறியும் பணிகள் துவங்கியது.மோப்ப நாய் அதன் பயிற்சியாளருடன் சிறிது தூரம் ஓடி மீண்டும் கொலை நடந்த இடத்திற்கே திரும்ப வந்தது.
தொடர் விசாரனையில் அவரது மகன் ரமேஷ (35) கொலை செய்தது தெரிய வந்தது இதை அடுத்து ரமேசை காவல் கிணறு விலக்கு பகுதியில் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு தொடர்பாக இருவருக்கும் வாக்கு வாதம் வன்த்தாகவும் அதில் ரமேஷ் தன் தந்தையை கொலை செய்ததாக கூறpபடுகிறது
அதுமட்டுமின்றி ராமசாமி சமீபத்தில் தனது சொத்தை விற்று கொஞ்சம் பணம் வைத்திருந்ததாகவும்,அதற்காக தந்தையை மகன் கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது .
பணகுடி போலீசாரா ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதியவர் உடல் பரிசோதனைக்கு நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் அரசினர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.l









