வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்

0
641

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் நேற்றிரவு திடீர் கடல் சீற்றம் ஏற்பட ராட்சத அலைகள் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரத்திற்கு எழும்பி கடற்கரையோர வீடுகள் வரை கடல் நீர் வந்தது

இதனால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து இருந்த பொருட்களை இழுத்து சென்றன. கடல் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.

வீடுகளுக்குள் தொடர்ந்து தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி அவர்களது உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். கடல் சீற்றத்தின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here