நெல்லையை கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக்குவோம் சபாநாயகர்,அமைச்சர்கள் உறுதி

0
622

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னேற்றம் குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி , தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கொரோன தடுப்பு நடவடிக்கைகள் , பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை , ஆக்சிஜன் இருப்பு விபரம் , மற்றும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் சித்தா, ஆயுர்வேதம் , யுனானி மருத்துவ முகாம்களில் செய்யக்குடிய மருத்துவ முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர் .


தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருங்காலத்தில் தேவைப்படும் ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்வும் , பரிசோதனைகளை விரிவு படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு சிறந்த முறையில் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் . கொரோனாவின் தாக்கத்தை குறைத்து நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற பணிகள் மேற்கொள்ளப்படும்’என்றார். அதையே சபாநாயகர் அப்பாவுவும் வழிமொழிந்தார்.

முன்னதாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோய் பாதித்தவர்கள், கோவிட் பாதுகாப்பு மையத்தில் உள்ளவர்கள் ஆகியோரிடம் சபாநாயகர் , அமைச்சர்கள் ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் குறை கேட்டனர்.


ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் சபாநாயகர் , அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் . நெல்லை வண்ணார்பேட்டையில் மாநகர காவல்துறை சார்பில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோன தடுப்பு உபகரணங்களையும் வழங்கினர் .

நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ,நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் , சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப் , ரூபிமனோகரன் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி செல்வி அபூர்வா, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு , மாவட்ட கொரோனா கண்காணிப்பு காவல் அதிகாரி முருகன் , மாநகர காவல் ஆணையாளர் அன்பு , நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார்அபினபு உள்ளிட்ட காவல்துறை மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here