தமிழக கபடி வீராங்கனை குருசுந்தரி அண்மையில் ஒரு சர்வதேச அளவிலான கபடித் தொடரில் பங்கேற்று நாடு திரும்பியுள்ளார். கடந்த வாரம் மலேசியாவில் நடந்த பெண்களுக்கான உலக அளவிலான கபடி போட்டியில் தங்கம் வென்றார். இந்திய அளவில் நடந்த போட்டிகளில் நான்கு முறை தமிழக அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
இவர் தமிழில் எம்.பில் முடித்து, தமிழக வனத்துறையில் பயிற்சிக் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ‘முதலில் மூன்று ஆண்டுகள் கபடி விளையாட ஷார்ட்ஸ் அணிவதற்குக் கூச்சப்பட்டேன். ஆனால் தொடர்ந்து வந்த வெற்றிகளை பார்த்த பெற்றோர் எனக்கு தைரியமூட்டினர். என்னுடைய பள்ளி, கல்லூரி குழுவினர், பயிற்சியாளர்கள் தந்த உற்சாகம் தற்போது இந்திய அணியில் என்னை இடம்பெறச் செய்துள்ளது,’ என்று நமது பண்பாட்டை வெளிப்படுத்துகிறார்.
வட இந்தியாவில், குறிப்பாக ஹரியானாவில் விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். தமிழகத்தில் கபடி விளையாட்டு போதிய கவனம் பெறவில்லை என்றே தோன்றுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் கபடி விளையாட மண் தரை மட்டும் உள்ளது. என்றும் சர்வதேச போட்டிகளில் மேட்கிரௌண்ட்டில் ஷூ அணிந்துதான் விளையாடவேண்டும் என்பதால் சிக்கலாக இருக்கிறது.
தற்போது நான் வேலைசெய்யும் வனத்துறையில் பெண்கள் அணியை தொடங்க அதிகாரிகள் ஆர்வமூட்டியுள்ளனர். தொடர் பயிற்சி, அடிப்படை வசதிகள் இருந்தால், மேலும் பதக்கங்களை குவிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது,”என்கிறார் அவர்.