தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக பேரூராட்சி தலைவர், செயல் அலுவலரின் கார் டிரைவர்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களை சேர்த்து பணம் எடுத்ததாக முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும் பசும்பொன் ரத்த தானக் கழகத் தலைவருமான புதுக்குடி ராஜா, லஞ்சம், ஊழல் தடுப்பு பிரிவுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் மனு அளித்தார்.
அத்துடன், தகவல் அறியும் உரிமை அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட செயல் அலுவலர், ‘ உங்களிடம் தனியாக பேசவேண்டும்’ என்றார். ‘ என்ன பேசப்போகிறீர்கள், இங்கேயே பேசுங்கள் ’ என்று ராஜா கூற, ‘ இங்கு அறையின் சுவற்றுக்கும் காது உண்டு. நாம வெளியே தனியாக சந்தித்து பேசுவோம்’ என்கிறார். அப்போது தலைமை எழுத்தர் குறுக்கிட்டு, ‘ நீங்கள் இருவரும் தனியாக பேசினால் எல்லாம் சரியாகிவிடும்’ என்கிறார்.
இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது. அதைக் கேட்கையில்,
‘ஆசை தீர பேசவேண்டும் வரவா, வரவா
நாலுபேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா, மெதுவா’
என்ற டூயட் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.