சிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு உத்தரவு

0
1438

பொன்.மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக பொன்.மாணிக்கவேல், ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பதிலளிக்க  நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொன். மாணிக்கவேல் பதவியை நீட்டிக்கக் கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரிக்க முடியாது என உறுதிபட தெரிவித்து விட்டது.

பொன்.மாணிக்கவேல் இனியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக தொடரக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. பொன்.மாணிக்கவேலுக்கு பதிலாக நாங்களே வேறு ஒரு அதிகாரியை நியமிக்கிறோம் என்று தெரிவித்தது.

தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன?- பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் கேட்டது. சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு கிடையாது என்று பொன்.மாணிக்கவேல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இறுதியாக, சிலை கடத்தல் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here