நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த சண்முகவேல் (68). தனியார் நூற்பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி செந்தாமரை (65). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. சம்பவத்தன்று இரவு சண்முகவேல் வீட்டு வராண்டாவில் அமர்ந்து செல்போனில் மகனுடன் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வந்த ஒரு கொள்ளையன் திடீரென சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்க அதை பார்த்த செந்தாமரை வெளியே ஓடி வந்து கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையன் மீது எறிந்து தாக்கினார்.
அதற்குள் மற்றொரு கொள்ளையன் அங்கு வர வயதான தம்பதியினர் அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்களை தொடர்ந்து தாக்கியும். ஒரு கொள்ளையன் செந்தாமரையின் தங்க சங்கிலியை பறித்த பிறகும் அரிவாளை காட்டி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். மனம் தளராத வயதான தம்பதி துணிச்சலுடன் அவர்களை விடாமல் தாக்கியதில் நிலை குலைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்ட போது . கொள்ளை நடந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களை இருவரும் துணிச்சலுடன் விரட்டியடிப்பது தொடர்பான காட்சிகள் பதிவாகி இருந்தன.
கொள்ளையர்களை வயதான தம்பதி துணிச்சலுடன் விரட்டியடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது








