தேனா பேங்க் தலைமை அலுவலகம் ஏலம்

0
1358

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவுடன், விஜயா பேங்க், தேனா பேங்க் என மூன்று வங்கிகளும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இணைக்கப்பட்டன.
இந்நிலையில் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள அதன் (முன்னாள்) தலைமை அலுவலகத்தை விற்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான ஏலத்திற்காக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அலுவலகம் குறைந்த பட்சம் 530 கோடி ரூபாய் இருப்பு தொகையாக வைத்துள்ளதாகவும் இவ்வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் தேனா பேங்கின் அசையா சொத்தாகக் கருதப்படும், இந்த அலுவலகத்தை இ ஏலம் மூலம், தேனா கார்பரேட் செண்டர் என்ற பெயரில் ஏலம் விட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏலம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here