மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி மத்திய அரசு அபராத தொகையை தாறுமாறாக உயர்த்தியது. இதை ஒடிசா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்த்தன.
சில இடங்களில் பைக்குகளின் விலையை விட அபராத தொகை அதிகமாக இருந்தது. இதனால் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘ மோட்டார் வாகன அபராத தொகையை மாநில அரசே நிர்ணயித்துக்கொள்ளலாம். அபராத தொகையை உயர்த்தியது விபத்தை தடுக்கத்தானே தவிர, அரசின் நிதியை உயர்த்திக்கொள்ள அல்ல. அபராத தொகை மாநில அரசுக்கு செல்கிறதே அல்லாமல் மத்திய அரசுக்கு வரவில்லை’ என்றார்.
அண்மை மாநிலமான கேரளா இந்த சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தகுந்தது.













