கன்னியாகுமரி மாவட்டம்
தெரிசனம்கோப்பு முதல் தெள்ளாந்தி வரை
குண்டும் குழியுமாக
பழுத்தடைந்துள்ள சாலையை
சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கூறி வந்தனர். அது குறித்து போராட்டம் அறிவித்த நிலையில்,
சாலையை சீரமைத்து தருவதாக
சமரச பேச்சுவார்த்தையின் போது
தோவாளை வட்டார வளர்ச்சி அனுவலர் உறுதியளித்தார்.
ஆனாலும் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், அதிகாரிகளை கண்டித்தும் சாலையை சரிவர செப்பனிடக் கோரியும் பொதுமக்கள் சார்பாக தெரிசனம்கோப்பு சந்திப்பில் சாலை
மறியல் போராட்டம் நடந்தது.

இப் போராட்டத்தில்,தெள்ளாந்தி உடையடி முடங்கன்விளை கிராம மக்கள் கலந்து கொண்டனர் . இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.









