நெல்லை சந்திப்பு கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தள்ளுபடி விற்பனை தொடங்கியது. நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் குத்து விளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை சாரால் தக்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வலதா ரமோனா முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ராஜேஷ் குமார், காந்திமதி விற்பனை நிலைய மேலாளர் கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை பகுதியில் ஐந்து கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றில் ஆரணி திருபுவனம் காஞ்சிபுரம் கூட்டுறவு பட்டு சேலைகள், கைத்தறி துணிகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. கடந்த ஆண்டு 4 கோடி ரூபாய் விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு விழாக்காலத்தில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.









