ஊர் சுற்றிகளுக்கு கட்டாய கொரோனா டெஸ்ட் : நெல்லை போலீஸ் டிரீட்மெண்ட்

0
1211


கொரோனா ஊரடங்கை நடைமுறைப்படுத்த நெல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . சாலைகளில் தேவையில்லாமல் கார் , பைக்குகளில் வருபவர்களை பிடித்து உறுதி மொழி எடுக்க வைப்பது, வெளியில் சுற்றமாட்டேன் என வீட்டிற்கு கடிதம் எழுத வைப்பது, திருக்குறள் எழுத வைப்பது என மாநகர காவல்துறை நூதன முறையில் தண்டனை அளித்தும் வெளியில் வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இதனையடுத்து மாநகர் பகுதி முழுவதும் சோதனைச் சாவடி அருகே கொரோனா பரிசோதனை முகாம் அமைத்து, கார் , பைக்குகளில் தேவையில்லாமல் வருபவர்களை பிடித்து கட்டாய கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர், காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பயந்து சோதனைச் சாவடி அருகில் வந்தவர்கள் பலர் உடனடியாக வாகனங்களை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டனர் .

இனி தினமும் இந்த டிரீட்மெண்ட் தான் என்று மாநகர போலீசார் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here