தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இடைச்சிவிளையை அடுத்த பொட்டல்விளை கிராமத்தில் உள்ள சுடலை கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நேமிசம் பொருள்களை திருடி சென்றுள்ளனர்.
அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதயடுத்து அதில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற் கொள்ளலாம் என்ற நிலையில் சிசிடிவி கேமரா மற்றும் கேமரா நினைவகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் திருடர்கள் திருடி விட்டு சென்றுவிட்டனர்.

கோவில் உண்டியலில் சுமார் 40000 ரூபாய் இருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் புகார் அளித்திருந்தனர். இதனால் குற்றவாளியை கண்டுபிடிக்க கைரேகை நிபுணர்களை வரவழைத்து சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜூ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.








