ஆண்டிபட்டியில் டிபன் கடை நடத்தி வரும் கோதண்டம்” என்ற இட்லி ராஜா சமூகநல ஆர்வலர். இவர் ஆண்டிபட்டி பேரூராட்சி மற்றும் ஒன்றியத்தில் உள்ள
பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, பேணி காத்து வருகிறார். பல்வேறு இடங்களிலும் மரங்கள் வெட்டப்பட்டு இயற்கை வளம் அழிந்து மழை யில்லாமல், மக்கள் கஷ்டப்பட்டுக் கொண் டிருக்கும் நிலையில் சமூக ஆர்வலர் “கோதண்டம் இட்லி” ராஜா நேற்று ஆண்டி பட்டி மயான சாலையி லுள்ள ஓடை அருகில் இருந்த 15 ஆண்டுகால அத்திமரம் சாயும்
நிலையில் இருந்ததை உயிர்ப்பிக்கும் வகையில் தனது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு மரத்தின் வேரோடு தோண்டி எடுத்து அடுத்த 20 நிமிடங்களில் அருகாமையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நட்டார். தற்போது மரம் செழிப்புடன் காணப் படுகிறது . சமூக ஆர் வலர் ராஜாவின் இந்த செயல் பொது மக்கள் மத்தியில் வரவேற்paiபெற்றுள்ளது.













