சந்திரயான் 2விண்கலம் கடந்த 22ஆம்தேதி ஜிஎஸ்எல்வி மார்க் 3 மூலம் ஏவப்பட்டது. 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவின் தென்பகுதிக்கு சென்று ஆராய்ச்சி செய்வதே இந்த விண்கலப் பயணத்திட்டம்.
கடந்த புதன் 2.21 மணியளவில் புவியின் வட்டப்பாதையிலிருந்து விலக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் துல்லியமாக செலுத்தப்பட்டது. 114 முதல் 18,072 கிமீ தொலைவில் நீள்வட்டப்பாதையில் சுற்றுமாறு விடப்பட்டது. இந்த சுற்றுவட்டப்பாதையின் தொலைவு படிப்படியாக குறைக்கப்படும்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ‘ சந்திராயனின் சுற்றுப்பாதை தொலைவு நாளை பிற்பகல் 1 மணியளவில் மேலும் குறைக்கப்படும். வரும் 28, 30 மற்றும் செப்டம்பர் 1ல் நிலவை மேலும் நெருங்கிச்செல்லுமாறு செய்யப்படும். செப்டம்பர் 1ல் நிலவில் இருந்து 30 & 100 கி.மீ. தொலைவில் சுற்றும். செப்டம்பர் 7 காலை 1.30க்கு நிலை நிறுத்தப்பட்டு லாண்டர் விக்ரம் நிலவின் தரையில் இறக்கப்படும்.














