கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லீம் லீக் எம்.பி.க்கள் முகமது பஷீர், அப்துல் சனத் சமதானி மற்றும் நவாஸ் கனி ஆகியோர் அஃப்ஸ்பா, ஊபா ஆகிய சட்டங்களை ரத்து செய்வது குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸை சமர்ப்பித்துள்ளனர்.
அஃப்ஸ்பா சட்டம் தொடர்வதை தொடர்ச்சியை மறுபரிசீலனை செய்வது குறித்து முடிவெடுக்க அஸ்ஸாம் மற்றும் மணிப்பூரை மத்திய அரசு அனுமதித்துள்ளது. அஸ்ஸாம் உள்ள நிலையில் இச்சட்டத்தை கைவிடுவது நல்லது என்று 3 ஆண்டுகளுக்கு முன்பு கருதப்பட்டதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் மாநில அரசு அதை நீட்டித்து வருகிறது.