நாட்டின் குறைந்த வயது ஆளுநர் தமிழிசை

0
954

 

தெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் (வயது 58) நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த 8ந்தேதி காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில்
பொறுப்பேற்று கொண்டார். தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர் தமிழகத்தின் முன்னாள் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தவர்.

கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 2ந்தேதி தெலுங்கானா உருவானபொழுது ஆளுநராக நரசிம்மன் பொறுப்பேற்றார். அவரது பதவி காலம் முடிவடைந்து விட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசையை கடந்த 1ந்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்து உத்தரவிட்டார். தெலுங்கானாவின் 2வது ஆளுநரான தமிழிசையே அனைத்து மாநில ஆளுநர்களை விட வயதில் குறைந்தவர். அவர் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கிறார்.

ஆந்திர பிரதேசத்தின் ஆளுநர் பிஸ்வா பூசண் ஹரிசந்தன் (வயது 85) வயது முதிர்ந்த ஆளுநர் ஆவார். ஆளுநர்களின் சராசரி வயது 73 ஆக உள்ளது.

குஜராத்தின் ஆளுநராக இந்த வருடம் ஜூலையில் பொறுப்பேற்று கொண்ட ஆச்சாரியா தேவவிரத் (வயது 60) 2வது குறைந்த வயதுடைய நபராக அறியப்பட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here