கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரலூர் பகுதி சாலையில், ஆட்டோவில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து,பெண்ணிடம் நகை பறிக்க முயன்றனர். இது குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து தட்டான்விளையை பகுதியை சேர்ந்த அரவிந்த்(55)மற்றும் மனோகரன் (43) ஆகிய இருவரை கோட்டார் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.










