திருநெல்வேலியில் தலையை அறுத்து ஒருவர் கொலை: பதற்றம்

0
1344

திருநெல்வேலி அருகே உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் ( 42 ). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் பைக்கில் பைக்கில் சேந்தமங்கலத்தில் இருந்து மணி மூர்த்தீஸ்வரத்துக்கு பாஸ்கர் வந்து கொண்டிருந்தபோது சிலர் வழிமறித்து பைக்கை மிதித்து தள்ளி, பாஸ்கர் தலையை அறுத்து தூரத்தில் 200 மீட்டர் மீட்டர் தூரத்தில் நடுரோட்டில் வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

கடந்த வாரம் தகராறு நடந்து, அதுதொடர்பாக தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பாஸ்கர் புகார் கொடுத்துள்ளார். போலீசார் எதிர் தரப்பையும் கூப்பிட்டு வைத்து பேசி சமாதான செய்துள்ளனர்.

இது தொடர்பாக, மணிகண்டன்,பொன்ராஜ் என்ற இருவர் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரண்டர் ஆகி உள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here