முறப்பநாட்டில் ரேஸ் மாட்டுவண்டி மோதி முதியவர் உயிரிழப்பு

0
477

முறப்பநாடு அருகே ரேஸ் மாட்டுவண்டி மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். மாட்டு வண்டியை ஓட்டிவந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பசும்பொன் நகரில் ரசிப்பவர் வேம்பன் மகன் சுப்பையா (80) இவர் முறப்பநாடு செய்துங்கநல்லூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ரேஸ் மாட்டு வண்டி இவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறிதது தகவல் அறிந்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வனசுந்தர் சண்முக மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து மாட்டு வண்டியை ஓட்டி வந்த அன்னவரதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கிலிங்க மகன் ஐயப்பன் (21) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here