ராதாபுரம் தொகுதி தேர்தல் தொடர்பாக அப்பாவு தொடர்ந்த வழக்கில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முதலில் தேர்தல் ஆணையம் போக்கு காட்டினாலும், ‘எந்திரங்கள் வேறு நாட்டிலா இருக்கின்றன?’ என நீதிபதி கேட்டதும் அமுங்கிப்போனது.
இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தபால் வாக்குகள் இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டன. நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.