திமுக, காங்.குக்கு மதிமுக, மமக, விசிக ஆதரவு

0
1167

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கூட்டணி கட்சிகள் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

முதலாவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டணியின் வெற்றிக்கு விசிக முழுமையாக பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here