திருச்சியில் நடைபெற்ற ஒரு விழாவில் அமைச்சர் நேரு, ‘தி.மு.க வினர் எதிர்ப்பை சமாளிக்கும் வலுவோடு தான் இருப்பார்கள். தி.மு.க சந்திக்காத எதிர்ப்பா, எமர்ஜென்சியையே எதிர்த்த இயக்கம் தி.மு.க. அண்ணாமலை புதிதாக பா.ஜ.க வின் தலைவராகி இருக்கிறார். அவர் மக்களிடம் பெயர் வாங்கவே இது போன்று பேசுகிறார். நாங்கள் தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும். தவறு செய்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு பதிலளித்தார்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் திமுக அரசியல் செய்கிறதா?என செய்தியாளர் கேள்வி எழுப்பிய பொழுது, ‘ அது இன்டர்நேஷனல் பாலிக்டிக்ஸ் அது திருச்சி பாலிடிக்ஸ் பத்தி கேளுங்க இந்திய அளவிலான கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார். நான் இந்த ஊரு எம். எல்.ஏ மந்திரி அதை பத்தி கேளுங்க” என்றார்,
’நீங்க முதன்மை செயலாளர்” என்று செய்தியாளர்கள் எடுத்துக்கொடுக்க, . ‘எனக்கு மேல் மூன்று பேர் உள்ளனர்’ என நகைப்புடன் தெரிவித்தார். ஆக, இவர் அரசியலில் அலெர்ட் ஆறுமுகமாகத்தான் இருக்கிறர்.