பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் படம் அசுரன்.
விவசாயத்தை மையப்படுத்திய இப்படத்தில் தனுஷ் குந்தலகேசி, கக்கன் மற்றும் பூச்சி என்ற மூன்று வேடங்களில் நடிக்கிறார். முதல் முறையாக தனுஷ் 3 வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
இந்த படத்தில், ’காதல்’ ‘கல்லூரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் காளையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். க்டோபர் 4ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2ம் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த போஸ்டரில், தனுஷ் நடிகர் ஜெமினி கணேசனைப் போன்று மீசை வைத்திருப்பது போன்ற புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.